கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

119 0

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று (21) மாலை முற்றுகையிட்ட காவல்துறையினர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 42 வயதுடைய  கசிப்பு வியாபாரியை கைது செய்துள்ளதுடன் 70 லீற்றர் கோடாவை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.