8 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!

260 0

சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 8 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் பூநகரி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சங்குபிட்டி பாலத்தருகில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வைத்து குறித்த ரிப்பர் வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது

குறித்த ரிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் சூட்சுமமாக மறைத்து மரக்குற்றிகள் எடுத்து செல்லப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரக்குற்றிகள் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பூநகரி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.