உதயகம்மன்பிலவுக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது

179 0

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 61 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 152 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகியன நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.