தேசியத்துக்கு முன்னின்றவர்களை ஏற்றுக்கொள்ள அமைப்புகள் இல்லை – சத்திவேல்

186 0

தேசியத்துக்கு முன்னின்றவர்களை ஏற்றுக்கொள்ள அமைப்புகள் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலையாகி நீதிமன்ற செயற்பாட்டுக்கு ஊடாக ஒருசிலர் குற்றங்கள் செய்யவில்லை என முழுமையாக வெளியே வந்து கொண்டிருக்கின்றார்கள்.

குற்றங்கள் புரிந்தவர்கள் என்ற அடிப்படையிலே நீதிமன்றம் அவர்களுக்குத் தண்டனை கொடுத்து ,புனர்வாழ்வு கொடுத்து அவர்களை சமூகத்தில் இணைத்திருக்கிறது.

இந்த நிலையிலே சமூக மயப்படுத்தல் என்று கூறுகின்ற போது, சிறையில் இருந்து வந்தவர்களும் கூட தனித்தனி நபர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை ஒழுங்கமைப்பதில் எந்தவிதமான திட்டங்களும் எங்களுக்கு இல்லை. இதன் காரணமாக தங்களுடைய பாதுகாப்பு கருதி, தங்களுடைய நலன் கருதி, தங்களுடைய பொருளாதாரம் கருதி இவர்கள் மீண்டும் இராணுவத்திடம் புலனாய்வாளர்களாக  இருக்கின்றார்கள்.

எனவே இவர்களை நாங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்றால், ஒரு பாரிய அமைப்பொன்று தேவையாக இருக்கிறது. அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்குள்ளே நாம் போகவில்லை. அது ஒரு பொருளாதாரம் சார்ந்த ஒன்று. பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்றார்.