கிளிநொச்சி – பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகினார்.
வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று, முல்லையடி பகுதியில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரில், ஒருவர் உயிரிழந்தாரென காவல்துறை தெரிவித்துள்ளது. பொல்காவலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவரே இதன்போது உயிரிழந்தார்.
காயமடைந்த இருவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

