வெடிகுண்டு கண்டுபிடிப்பு

327 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

போரின் போது வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சுமார் 250 கிலோவிற்கும் அதிக நிறைகொண்டது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குண்டியை அகற்றுவது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.