கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிய திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்தை அதே திசையில் பயணித்த மற்றொரு டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார சைக்கிளை மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

