வயோதிப பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு!

304 0

மட்டக்களப்பு  நகர் லயன்ஸ் கிளப் வீதியில் வயோதிப பெண்மணி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற 50 வயதுடைய கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நேற்று (06) இரவு கைது செய்துள்ளனர்

குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மாங்காய் பிடுங்க சென்றவர் சம்பவதினமான திங்கட்கிழமை குறித்த வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் தென்னைமரத்தில் தேங்காய் பிடுங்கி கொடுத்துவிட்டு மாங்காய் பிடுங்க சென்ற வீட்டில் 77 வயதுடைய வயோதிப பெண்மனி தனிமையில் இருந்தபோது வீட்டினுள் சென்று அவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து காவல்துறையினர் குறித்த திருடனை நேற்று இரவு கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்கச்சங்கிலியை மீட்டுள்ளனர்