எதிர்வரும் வாரத்திற்குள் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வலய மற்றும் பாடசாலை மட்டங்களில் தடுப்பூசி ஏற்றுவோருக்கான பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

