இங்கிலாந்து ராணுவ தளபதியுடன் நரவனே சந்திப்பு

275 0

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே காசினோ நகரில், இந்திய ராணுவ நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கிறார்.இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இங்கிலாந்துக்கு சென்றார். அவருக்கு இங்கிலாந்து ராணுவம் அணிவகுப்பு மரியாதை அளித்தது. இங்கிலாந்து ராணுவத்தின் படைப்பிரிவுகளை அவர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து ராணுவ தளபதி சர் நிகோலஸ் கார்ட்டரை சந்தித்து பேசினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இங்கிலாந்தை தொடர்ந்து நரவனே இத்தாலிக்கு செல்கிறார். அந்நாட்டு முப்படை தலைமை தளபதியை சந்திக்கிறார். காசினோ நகரில், இந்திய ராணுவ நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கிறார்.