நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர் விவரம்

253 0

நாட்டில் நேற்று (06) கொவிட் தொற்றாளர்களாக மேலும் 934 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 267,433 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து மேலும் 1,717 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரையில் 236, 659 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 45 பேர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.