ஆறுதிருமுகனுக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் பாராட்டு

452 0
அகில இந்து மாமன்றத்தின் நிதியாலும் சிவபூமி அமைப்பாலும் சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்களை குருமார்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்த செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுகனுக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஆறுதிருமுகன் அவர்கள் இந்துமதத்தின் மீதும் குருமார்கள் மீதும் மிகுந்த மதிப்பு, பற்றுக் கொண்டவர்.
கொரோனா காலகட்டத்தில் இந்து குருமார்களுக்கு உதவி செய்ய நினைத்த அவரது மனப்பாங்கு வரவேற்கத்தக்கது. அவரது சேவை மென்மேலும் வளர இறைவன் ஆசிர்வதிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.