யாழில் நேற்றைய தினம் 9,462 பேருக்கு தடுப்பூசி

304 0

யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் 9,462 பேர் தடுப்பூசியை முதற்கட்டமாக பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று (05) ஆரம்பமாகியது.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்துக்காக 50 ஆயிரம் ‘சினோபார்ம்’ தடுப்பூசி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் முதல் கட்டமாக 49 ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது.

இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தேற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் இம்மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இதில் 46 ஆயிரத்து 648 பேர் இரண்டாவது தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.