ஆவணப்பொக்கிசத்தை உலகத்தமிழினத்தின் கைகளில் கையளிப்பதில் தமிழீழ ஆவணக்காப்பகம் உவகையும் பெருமிதமும் கொள்கின்றது.

986 0

வணக்கம்

வரலாற்றை படி
வரலாற்றை படை
என்கின்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு தமிழீழ ஆவணக்காப்பகம்
செயல்வடிவம் கொடுத்துள்ளது.

தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து
ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறைபாடாகும் என தமிழீழக்
கல்விக்கழகப்பொறுப்பாளர் திரு.
வெ.இளங்குமரன் அவர்கள் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல்
வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார்.அவர்
அங்கு மேலும் பேசுகையில் இந்த மண் செய்த அரிய சாதனைகளும் சம்பவங்களும்
வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை.
இதைப்போலவே தமிழர்கள் தமது மொழியையும், இனத்தையும் பற்றிய
பதிவுகளைப்பேணவில்லை.மிகவும் தொன்மையான பல இலக்கியங்கள் தமிழில்
இருந்தும் அவைபற்றிய முழுவிபரங்களும் பதிவு செய்யப்படவில்லை .இவ்வாறான
நிலையில் எமது மொழிக்கு, இனத்துக்குப் பின்னர் தோன்றிய மொழி மற்றும்
இனங்கள் எல்லாம் மிகவும் சிறப்புற்று விளங்குவதைக் காணலாம். எனவே இந்நூல்
போன்ற ஆவணப்படுத்தக்கூடிய பதிவேடுகள் வெளியாவதன் மூலம் எமது சாதனைப்
பதிவுகளை நிலைநிறுத்திக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தார். எனவே இவற்றை
கருத்தில் கொண்டு எமது தமிழ்ச் சந்ததியினருக்கு ,எமது வரலாற்றை
கையளிக்கும் வகையில் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ
விடுதலைப்புலிகளின்
(தமிழீழ அரசின் ) போராட்டம் சார்ந்து வெளியீடு செய்யப்பட்ட நூல்கள்
.பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் , சிங்கள மற்றும் இந்திய அரசு நிகழ்த்திய
தமிழினப்டுகொலை ஆதாரங்கள் மற்றும் தொன்மைத் தமிழ் இலக்கிய நூல்கள், ஏனைய
வரலாற்று பொக்கிசங்களை ஒரு சேர இணைத்து கரும்புலிகள் நாளாகிய இன்று
தமிழர் வரலாற்று ஆவணப்பொக்கிசத்தை உலகத்தமிழினத்தின் கைகளில்
கையளிப்பதில் தமிழீழ ஆவணக்காப்பகம் உவகையும் பெருமிதமும் கொள்கின்றது.

https://tamileelamarchive.com/


“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள் நாடு
நமக்கு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே. எமது நிலையற்ற
வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது”

– தமிழீழ தேசியத்தலைவர், மேதகு வே. பிரபாகரன் –

நன்றி

இவ்வண்ணம்

அவை (தொடர்புகளிற்கு மகேஸ் – 0045 2173 4179)
அனைத்துலக தொடர்பகம்