சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி அவர்கள் தற்போது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ள நிலையில் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
நாட்டின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி அவர்கள் இன்றைய தினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடு ஒன்றை மேற்கொள்வதற்காக குறித்த இடத்துக்கு வருகை தந்திருக்கின்றார்
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
அண்மையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த நேர்த்தி கடனை தீர்க்கும் முகமாக இன்று ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வருகை தந்ததாக அறிய முடிகின்றது
இந் நிலையில் குறித்த வழிபாடுகளில் கலந்து கொள்கின்ற விடயங்களை செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு காவற்துறையினரின் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது அவர் தனிப்பட்ட நிகழ்வாக வழிபாடுகளில் கலந்து கொள்ள வந்த நிலையில் அதனை ஒளிப்பதிவு புகைப்படங்கள் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

