மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹரோயின் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று சனக்கிழமை (03) கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பகுதியில் காவற்துறையினர் சுற்றிவளைத்து என்துடதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது இருவரை 180 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளதுடன் 930 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யபபட்டவர்கள் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்

