ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி – 20 பேர் மாயம்

234 0

ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி மாயமானோரை தேடும் பணியில் போலீசார் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில், கடந்த 3 நாட்களாக பலத்த மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் மாயமாகி உள்ளனர். இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.
மழை நீரும், மண்ணும் கலந்து சரிந்ததில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை மண்ணுக்குள் புதைந்தன.  இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதுவரை 20 பேரை காணவில்லை. மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுவரை 2 உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். இந்தப் பேரிடரை எதிர்கொள்ள பிரதமர் யோஷிஹிடே சுகா அதிரடி படை ஒன்றை அனுப்பியுள்ளார். போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.