சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் 7 பேரும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சேவையின் அவசியம் கருதி இவர்களுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களான நந்தன முனசிங்க, அஜித் ரோஹண, பதிநாயக, தர்மரத்ன, ஜயலத், கொடிதுவக்கு, தமிந்த ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிரதி பொலிஸ் மாஅதிபர் விஜயசேனவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

