சென்னையில் இதுவரை 10,042 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மாநகராட்சி தகவல்

193 0

மாநகராட்சியின் அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வரிசையில் காத்திருக்காமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 22-ந்தேதி தொடங்கி வைத்தார்.

மாநகராட்சியின் அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வரிசையில் காத்திருக்காமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18004250111 என்ற உதவி எண் மற்றும் 9700799993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்யும் மாற்றுத்திறானாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள தற்காலிக தடுப்பூசி முகாம்களின் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நாள் முதல் கடந்த 1-ந்தேதி வரை 10,042 மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.