நாளாந்தம் 10,000 பேர் வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் தொற்றில்லாத நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித் சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அனர்த்தங்களால் நாளாந்தம் 35 பேர் மரணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வருடாந்தம் 3 தொடக்கம் 4 மில்லியன் பேர் வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
எனினும் இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதி பெறுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

