தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல் செலவு ரூ.666.43 கோடி- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

223 0

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல் செலவுகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.617.75 கோடி ஒதுக்கப்பட்டது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல் செலவுகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.617.75 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து கூடுதல் நிதி கேட்டு கடிதம் எழுதப்பட்டது.

அதன்படி, அனைத்து கலெக்டர்களும் மொத்தம் ரூ.126.18 கோடி தொகை கேட்டிருந்தனர்.இந்தத் தொகையை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து, தேர்தல் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள பாக்கித் தொகைகளை செலுத்துவதற்காக ரூ.48.68 கோடி தொகையை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி தொகை செலவிடப்பட்டு உள்ளது.