தமிழீழம் முல்லை மாவட்டத்தில் யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோவிலின் தொடரும் நிவாரணப் பணிகள்.

670 0

யேர்மன் ஸ்ருட்காட்அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் 30.06இ01.07.2021 நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு – மயில் குஞ்சன் குடியிடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தேவையுடைய 100 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த உதவியினை வழங்கிய அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினருக்கு முல்லை மாவட்ட மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.