பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது

286 0

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படி தீர்மானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படாது என பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் தெரிவித்தனைத் தொடர்ந்தே பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையானது கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு எதிராக வழக்கு தொடர இருந்ததுடன், அரசாங்கமானது குறித்த நிறுவனங்களுக்கு கோதுமை மாவின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.