மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் – அமைச்சர்வீட்டின் சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் அரசபகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பு

202 0

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிரி கமரா டிவி ஹார்ட் டிஸ்க் மொரட்டுவ அரச இரசாயனவியல் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 21 ம் திகதி அமைச்சரின் வீட்டிக்;கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாவலர் ஒருவரை சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது இதில் மகாலிங்கம் பாலேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் முக்கியதடய பொருளாக அமைச்சரின் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிரி கமகமராவின் பாகமான ஹார்ட் டிஸ்க் (சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் ஒரு மாதகாலத்திற்கு மேலாக பழுதடைந்து கழற்றப்பட்டு திருத்த கொடுக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது

இதனையடுத்து அந்த சிசிரி கமராவின் பாகமானஹார்ட்டிஸ்க் பொலிசாரிடம்ஒப்படைக்கப்பட்டதையடுத்து இதனை அரச இரசாயனவியல் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டு அதனை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்.

இந்த சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றதாக அவர் தெரிவித்தார்