மன்னார் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2,000 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 29,30 ஆகிய திகதிகளிலும் இன்றும்(01) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றுந்து ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் இரு படகுகளும் கடற்படையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

