நீர்வாழ் உயிரின வளர்ப்பு மாதிரி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

237 0

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அதிக முதலீடு செய்திடும் நோக்கில் “மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி” திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்புகுழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள் பயன் பெறலாம்.
பொது பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்சவரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியதொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை உதவி இயக்குநர் அலுவலத்தினை தொடர்பு கொள்ளலாம். 31.07.2021-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் நல்லதங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளர் (தொலைபேசி எண். 9629191709) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு adferode1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 0424 2221912 என்ற தொலைபேசி எண்ணிலும்  தொடர்பு கொள்ளலாம் என