சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

158 0

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் காலி,வெலிவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலையடுத்து காலி காவல்துறையின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1,940 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.