வேள்ட் விஷன்’ நிறுவனத்தால் 4,750 குடும்பங்களுக்கு நிவாரணம் அன்பளிப்பு

291 0

பல்வேறு அனர்த்தங்களால் பாதிப்புற்ற கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, ஜாஎல பிரதேசங்களைச் சேர்ந்த 4750 குடும்பங்களுக்கு 14 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவை வழங்க வேள்ட் விஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்தக் குடும்பங்களில் கிட்டத்தட்ட 8ஆயிரம் சிறார்களும் 675 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் இருப்பதாக அவர்கள் கூறினர்.

கொவிட் தொற்றுகள் அதிகரிப்பைத் தொடர்ந்து அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் வத்தளை மற்றும் ஜாஎல பிரதேசங்கள் அண்மைய பருவ மழையால் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

கம்பஹா மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 20,500க்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாக கடலோரப் பகுதிக்கு அருகில் வசிக்கும் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

“இரு நாட்களாக தமது பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுக்க முடியாததால் பெற்றோர் எம்மிடம் உணவைக் கோருகின்றனர். எம்மால் அனைவருக்கும் வழங்க முடியாததால் இந்தப் பொருட்கள் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தரும்” என நிவாரணப் பொருட்களை ஒப்படைக்கும் போது வத்தளை பிரதேச செயலாளரான பி.டி.ரி.சி.ரஜிகா தெரிவித்தார்.