2 வீரர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

282 0

இலங்கை கிரிக்கெட் அணியின், வீரர்கள் இருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ​தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது என இங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும், குமிழி பாதுகாப்பை மீறி, செயற்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உண்மையானவையா? அல்லது பொய்யானவை? என்பது தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளரிடமும் அறிக்கை ​கோரப்பட்டுள்ளது.