கொவிட் வகைகள் குறித்து மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சி

362 0

இலங்கையில்  பரவியுள்ள கொவிட் வகைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுநோயியல் பிரிவின் ஊடாக வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆராய்ச்சியின் முடிவுகளை 7 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சிலர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இனங்காணப்பட்ட பகுதிகளில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.