கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

396 0

பொரளை கோதமிபுர பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கோதமிபுர தேசிய குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் 47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொரளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.