“நாய்” என கூறியிருந்தால் அதனை நிரூபித்துக் காட்டவேண்டும்-ஜெ.ரஜீவ்காந்த்(காணொளி)

237 0

மாநகர சபை அமர்வில் குறிப்பிட்ட நபரை பார்த்து தான் “நாய்” என கூறியிருந்தால் அதனை நிரூபித்துக் காட்டவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர பை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபை அமர்வில் சக உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி “நாய்” என விளித்து பேசியதாக ஜெ.ரஜீவ்காந்தை ஒரு மாத காலத்திற்கு சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்யாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜெ.ரஜீவ்காந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.