A/L மீள் திருத்த விண்ணப்பம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு

233 0

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

எனினும், இணைய வழியில் மாத்திரமே குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர்  இணைய வழியில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

விண்ணப்பங்களை doenets.lk என்ற இணையத்தளம் மூலம் தரவிறக்கவும் அனுப்ப முடியும்.

விண்ணப்ப படிவத்துக்கான கட்டணமான 250 ரூபாயை இணைய வழியில் அல்லது தபாலகத்தில் செலுத முடியும் என்றும் கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலையையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.