ஹபரனையில் உயிரிழந்த தாயும் மகனும் படுகொலை – பிரேதப் பரிசோதனையில் உறுதி

254 0

ஹபரனை கிதுல்வுதுவே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் தாயும் மகனும் துப்பாக்கிச் சூடு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 20ஆம் திகதி மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரதும் அவரது 13 வயது மகனதும் சடலத்தை ஹபரனை பொலிஸார் மீட்டிருந்தனர்.

குறித்த இருவரும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்தனர் என்று ஆரம்பக்கட்ட கூறப்பட்டது.

எனினும் அவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்டைய இளைஞரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.