நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ரணில்!

200 0

நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய அமர்வின் ஆரம்ப நிகழ்வாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கியத் தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காகக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 9 மாதங்களுக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசாங்கத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட 200 பில்லியன் ருபாய் பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.