காங்கோவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இனக்கலவரம்: பலி எண்ணிக்கை 35-ஆக உயர்வு

215 0

201612270704262506_dr-congo-christmas-slaughter-leaves-35-dead_secvpfடிஆர்.காங்கோ நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடைபெற்ற இருபிரிவினரிடையே நடைபெற்ற இன கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.

காங்கோ நட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் நந்தே என்ற இனத்திற்கும், ஹது என்ற இனத்திற்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு முதல் நாள் இந்த இரண்டு இனக்குழுவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. காங்கோவின் வடக்கு கிவு பகுதியில் குறிப்பிட்ட சில கிராமங்களில் இந்த கலவரம் வெடித்தது.
ஜனநாயக கூடுப் படை பிரிவை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் எரிங்கெட்டி பகுதியில் சனிக்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்த வன்முறையில் உயிரிழப்பு 35-ஆக உயர்ந்தது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹூது பிரிவை சேர்ந்தவர்கள். முன்னதாக, காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் அதிபரின் ஆட்சிக்காலம் கடந்த டிசம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. பதவிக் காலம் முடிந்த பின்னும் அதிபர் ஜோசப் கபிலா, ஆட்சியை விட்டு எப்போது விலகுவார் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.

இதனால் அதிபருக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின் போது, காங்கோ போலீசாருக்கும், கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.