யாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு

364 0

நாட்டில் 100 நகரங்களை பல் பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய பெரு நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம் நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.