nசொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான பணத்தில், 400 அம்பியுலன்ஸ்களை அரசாங்கம் கொள்வனவு செய்திருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் 3.7 பில்லியன் ரூபாய் நிதியை செலவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.
இது குறித்து கருத்துரைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான பணத்தில் 400 அம்பியுலன்ஸ்களை கொள்வனவு செய்திருக்கலாம்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியதைப் போன்று சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்வதை இரத்துசெய்திருந்தால் அரசாங்கம் பாரிய தொகையை மீதப்படுத்தியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

