வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவு தினம் (காணொளி)

328 0

vavuniyaவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முதலாக பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவிடத்தில் சுனாமி பேரலையின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

நரசிங்கர் ஆலயத்தின் பரிபாலனசபையின் உறுப்பினர் கோ.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற நினைவு தினத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், பிரதேச செயலாளர் கா.உதயராசா, நகரசபை செயலாளர் தயாபரன் உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தனர்.

நிகழ்வில் உரை நிகழ்த்திய வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜியமுனி, ஜாதி மத பேதமின்றி சுனாமி இலங்கையில் அனைத்து மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தியதாக கூறினார். சுனாமியில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் மரணத்தை தழுவியுள்ளனர்.

மரணம் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது ஆகவே நாங்கள் எப்போதும் நட்புடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜியமுனி தெரிவித்தார்.