நாட்டில் மேலும் 2,361 பேருக்கு கொவிட்!

338 0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 361 பேர்  நேற்று அடையாளம் காணப்பட்டதாக  இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 329 பேரும், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த 32 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காண்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன்,  நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 32 ஆயிரத்து 955 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.