ஹட்டனில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

264 0

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் நகரில் அனுமதிப்பத்திரம் இன்றி திறக்கப்பட்டிருந்த சகல அத்தியாவசிய கடைகளையும் பூட்டுமாறு பொலிஸார் இன்று (14) மாலை உத்தரவிட்டனர்.

கடந்த சில தினங்களாக அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும் வாகனங்களும் நகருக்கு வருகை தந்துள்ளன.

இதனால் தனிமைப்படுத்தல் சட்டங்கள் கடைபிடிக்காத நிலையில் காணப்பட்டன.

இதனை கருத்திற்கொண்டு அனுமதிப்பத்திரம் இல்லாத கடைகள் மூடப்பட்டதுடன் அத்தியாவசிய தேவைகள் இன்றி வருகை தந்த முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

எதிர்வரும் தினங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி கடைகள் திறக்கப்பட்டால் திறக்கப்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.