ஆழிப் பேரலை உடுத்துறை மருதங்கேணியில் மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி

237 0

15672558_1389590881075723_2088886392723393093_nஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர்.

அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய 14 நாடுகளில் 230,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.