யேர்மனி பிராங்போட் விமானநிலையத்தில் நாடுகடத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

484 0

யேர்மனியில் அரசியற் தஞ்சம் கோரியிருந்த தமிழீழ மக்களை யேர்மனிய அரசு நாடுகடத்துவதற்கு எதிராக யேர்மனியில் பல இடங்களில் வாழும் தமிழீழ மக்களால் ஆர்ப்பாட்டங்கள் நாடாத்தப்பட்டது. அந்த வகையில் இன்று பிராங்போட் விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இன்று நாடுகடத்தப்படுவதை இறுதி நேரத்தில் அறிந்த மக்கள் விமான நிலையத்தில் 14.30 மணியளவில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களுடன் சில யேர்மனிய மக்களும் இணைந்துகொண்டு அரசின் நாடுகடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்

இருந்தபோதும் இன்று 9.6.2021 புதன்கிழமை யேர்மனி பிராங்போட் விமான நிலையமூடாக அரசியற் தஞ்சம் கோரியிருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டனர்.
சட்டத்தரணிகள் மூலமாகவும் இறுதி நிமிடம் வரை எடுத்த முயற்சிகள் பயனற்று மூவர் மாத்திரம் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் இன்று 18.00 மணிக்கு விசேட விமானமூலம் கொலைக்களமாகிய சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.