சம்பந்தனிற்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம் தொடர்பில் தெரிவிக்கும் கே.வி.தவராசா

224 0

எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே ஒரு பெண் பிரதிநிதித்துவம் கூட இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. சுமந்திரன் கூறினார் இந்த நாட்டில் வாக்காளரைப் பொறுத்த வரைக்கும் 50 வீதத்திற்கும் மேற்பட்டவர்களாக இருப்பது பெண்கள்.

சம உரிமை கொடுக்கப்பட வேண்டிய பெண்களுக்கு எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே ஒரு பெண் பிரதிநிதித்துவம் கூட இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியிருந்தேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு.

நீங்கள் சரியான முறையிலே சில முடிவுகளை எடுக்காமல் விடுவீர்களாக இருந்தால் தந்தை செல்வா 77ஆம் ஆண்டு கூறினார் தமிழ் மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று.

சரியான முடிவெடுத்து சரியான நகர்வு பாதையிலே செல்லவில்லை என்று சொன்னால் நிச்சயமாக எங்கள் இனத்திற்கு, சமூகத்திற்கு செய்கின்ற துரோகம் என்பது தான் என்னுடைய வெளிப்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார்.