மீண்டும் அரசியலில்  திஸ்ஸ

375 0

downloadசெயற்பாட்டு ரீதியான அரசியலில் தான் மீண்டும் ஈடுபட உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்படும் அரசியல் தீர்மானத்தை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெயரளவு தலைவராக ஜீ.எல்.பீரிஸ் இருந்த போதிலும் அதன் உண்மையான தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.