தலைவர்கள் இல்லாதமை : ஒரு நெருக்கடி- விக்டர் ஐவன்

87 0

“இப்போது தலைவர்கள் இல்லை. நாட்டை சீனக் காலனியாக மாற்றுவதன்

மூலம் வெற்றிடம் நிரப்பப்பட வாய்ப்புள்ளது” 

ஊழல் மற்றும் கொடூரமான முறைமையை மாற்றுவதற்கும், நாடு தோல்வியுற்ற தேசமொன்றின் நிலைக்கு தள்ளப்படுவதை தடுப்பதற்கும் இலங்கை பெற்றுக்கொண்ட கடைசி வாய்ப்பாக 2015 இல் ஏற்பட்ட அரசாங்கத்தின் மாற்றம் கருதப்படுகிறது. ஆனால் அந்த வாய்ப்பு நேர்மையற்ற மற்றும் வஞ்சகமான முறையில் பயன்படுத்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்லாமல் , நல்லாட்சி அரசாங்கத்தில் பொறுப்புகளை வகித்த அனைவருமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும், இப்போது முழு குற்றச்சாட்டையும் ரணில் விக்கிரமசிங்கவின் மீது சுமத்துகிறார்

இலங்கை தவிர்க்க முடியாமல் ஒரு பேரனர்த்தத்திற்குள் மூழ்கிவிடும் என்று எனக்கு தோன்றுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கை இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மூழ்குவதை தடுக்க தேவையான தொலைநோக்கு மற்றும் முன்னோடியாக வழிகாட்டும் ஆற்றலைக் கொண்ட முதிர்ந்த தலைவர்கள் நம்மிடையே இல்லை. எனவே, நாட்டில் சாதகமான மாற்றம் ஏற்பட்டால், அது ஒரு பாரிய பேரழிவுக்கு பின்னர்தான் ஏற்படும்.

தொற்றுநோயுடன் விளையாடுதல்

கொவிட் தொற்றுநோயை எதிர்கொள்வதில் பின்பற்றப்பட்ட அணுகுமுறையிலிருந்து இலங்கையின் தலைமைத்துவப் பிரச்சினையை மதிப்பிட முடியும். ஆரம்பத்தில் இருந்தே, அரசாங்கம் தொற்று நோயுடன் விளையாடுவதாக தோன்றியது. இராணுவத் தளபதியை தனது பக்கத்திலேயே வைத்துக்கொண்ட ஜனாதிபதி, போர்க்குணமிக்க புலிகள் போன்ற கடுமையான சவாலை சமாளித்த எங்களுக்கு கொவிட் -19 ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்று பெருமையுடன் குறிப்பிட்டார். தொற்று நோய் தாக்கியபோது அது கட்டுக்கதையாகவிருந்தது.விஞ்ஞானம் அதிகளவுக்கு இடத்தை பிடித்திருக்கவில்லை .நாட்டில் கொவிட் தொற்றுநோய் இப்போது ஒரு நிலையை எட்டியுள்ளது.இது சீராக அதிக உச்சமட்டத்திற்கு கூடிக்கொண்டு செல்கிறது . தொற்றுநோய் பரவுவதை தடுக்க இறுக்கமான கொள்கைகள் பின்பற்றப்படாவிட்டால், அது பரவுவதில் விரைவான அதிகரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய இறப்பு விகிதம் ஏற்படக்கூடும் என்று அனைத்து மருத்துவ சங்கங்களும் கருதுகின்றன. நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு நாட்டை முடக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தில் மருத்துவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையும், பொதுமக்களுக்கு அவர்கள் அளித்த விளக்கங்களும் அரசாங்கத்தின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டன; இராணுவத் தளபதியும் மருத்துவர்களை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இலங்கையில் கொரோனாவின் நிலைமை தொடர்பாக ஐலண்ட் பத்திரிகைக்கு விளக்கியதற்கு காரணம் காட்டுமாறு மருத்துவர் ஒருவரிடம் கேட்கப்பட்டதாக அறியப்படுகிறது.

தொற்றுநோயை பற்றி பொதுமக்கள் மருத்துவர்களிடமிருந்துஅறிந்து கொள்ள வேண்டாமா? மிகவும் ஆபத்தான விட யம் என்னவென்றால், நாட்டை 14 நாட்கள் முடக்குவது தொடர்பாக மருத்துவ சங்கங்கள் முன்வைத்த திட்டத்தை ஏற்க மறுத்தமை மூலம் மனித உயிர்களை விட பொருளாதார இழப்பு குறித்து அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என்று தெரிகிறது.

எதிர்க்கட்சியின் இயலாமை

நாடு 14 நாட்களுக்கு பூட்டப்பட வேண்டுமா இல்லையா என்ற கேள்வி மக்களின் வாழ்வாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். இது தொடர்பாக அரசாங்கத்தால் பின்பற்றப்படும் கொள்கை தவறானது என்றால், எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி நிலைமையை சரிசெய்ய ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா? இன்று நாம் எதிர்க்கட்சிகளிடமிருந்து கேட்பது மோசமான குரல்கள் மட்டுமே, அதுவும் ஒன்றிணைந்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முணுமுணுப்புகளாக வந்துள்ளன.

மருத்துவ சங்கங்கள் முன்வைத்த திட்டத்தை ஏற்க மறுத்தது. மனித உயிர்களை விட பொருளாதார இழப்பு குறித்து அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என்று தெரிகிறது.

எதிர்க்கட்சியின் இயலாமை

நாடு 14 நாட்களுக்குமுடக்கப்பட வேண்டுமா இல்லையா என்ற கேள்வி மக்களின் வாழ்வாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். இது தொடர்பாக அரசாங்கத்தால் பின்பற்றப்படும் கொள்கை தவறானது என்றால், எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி நிலைமையை சரிசெய்ய ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா? இன்று நாம் எதிர்க்கட்சிகளிடமிருந்து கேட்பது மோசமான குரல்களை மட்டுமே, அதுவும் ஒன்றிணைந்தல் லாமல் மற்றும் ஆங்காங்கு முணுமுணுப்புகளாக வெளிவந்துள்ளன.

இந்த விவகாரத்தில் தீவிரமாக பிளவுபட்ட நான்கு மருத்துவ சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு அறிக்கையை முன்வைக்க முடியுமாக இருந்தால் ,எதிர் தரப்பு அரசியல் கட்சிகளால் ஏன் இதேபோன்ற முயற்சியை மேற்கொள்ள முடியவில்லை? அத்தகைய முயற்சியின் மூலம் எதிர்க்கட்சி அரசாங்கத்தின் மீது ஒரு தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லவா?அத்தகைய கூட்டு முயற்சி தன்னிச்சையாகவோ அல்லது தானாகவோ ஏற்படாது. இது எதிர்க்கட்சியில் ஒரு வலுவான தலைவரின் தலையீட்டால் அடையப்பட வேண்டிய ஒரு இலக்கு.

கொவிட் பிரச்சினை மட்டுமல்லாமல், பல சிக்கல்களை தீர்க்க ஒரு கூட்டான ஒத்துழைப்பு தேவை. இலங்கை ஒரு தேசமாக தோல்வியடையாமல் இருப்பதற்கு ஒரு கூட்டு முயற்சி இருக்க வேண்டும். அதற்கு தேவையான சீர்திருத்தங்கள் அடையாளம் காணப்படுவது அவசியம் மற்றும் முன்கூட்டியே ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை அவர்கள் எட்ட வேண்டும். அவை எதுவும் தன்னிச்சையாக வரப்போவதில்லை, மேலும் அவை முன்முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் அடைய வேண்டிய குறிக்கோள்கள் என்று விவரிக்கப்படலாம்.

எங்கள் தலைவர்களின் தன்மை

இலங்கையின் நெருக்கடியை தலைவர்களின் பற்றாக்குறையின் நெருக்கடியாகவும் பார்க்கமுடியும்.முதிர்ச்சியடைந்த ஜனநாயக ரீதியான தலைவர்கள் இல்லாததால் தான், ஒரு நாடாக இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்கு சென்று, இறுதியில் தோல்வியுற்ற அரசாக மாறியது. நவீன காலங்களில் இலங்கை உருவாக்கிய எந்த அரச தலைவர்களையும் முதிர்ந்த ஜனநாயக தலைவர்களாக கருத முடியாது. ஜனநாயகம் குறித்த போதிய தத்துவார்த்த அறிவை அவர்கள் கொண்டிருந்ததாகவும் கருத முடியாது. இந்தியாவை போன்றல்லாமல் இலங்கை ஒரு தனித்துவமான சுதந்திரப் போராட்டத்தை மேற்கொண்டு சுதந்திரத்தை பெற்றிருக்கவில்லை என்பதும் இந்த சூழ்நிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.ஒரு கடுமையான சுதந்திரப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி, ஜனநாயக விழுமியங்களைப் பற்றிய புரிதலுடன் கூடிய மேம்பட்ட சமூகத்தின் தோற்றத்துக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் அதே வேளையில், முதிர்ச்சியடைந்த தலைவர்களின் தோற்றத்திற்கு இது வழி வகுத்திருக்கும். அவ்வாறு இருந்திருந்தால், சாதி, இனம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள வேறுபாடுகளை புறக்கணித்து ஒரு ஐக்கிய தேசத்தைக் கட்டியெழுப்ப இது ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்திருக்கும்.

ஆயினும், அந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் இலங்கை சுதந்திரத்தை பெற்றிருந்தது.அடிபணிதலைக் காண்பிப்பதன் மூலமும், ஏமாற்றும் வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், ஆக்ரோஷமான சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்காமலும் பெறப்பட்ட சுதந்திரமாக இது கருதப்படலாம். முன்னாள் பிரதம ர் சேர் ஜோன் கொத்தலாவலவுடன் நெவில்ஜயவீர நடத்திய நேர்காணலின் அடிப்படையில், ஒரு சிறந்த அரசு ஊழியரான அவர் எழுதிய ஒரு நீண்ட தொடர் கட்டுரைகளில், சுதந்திரத்தை பெறுவதற்கு பயன்படுத்தப்படும் சதித்திட்டங்கள் மற்றும் ஏமாற்றும் வழிமுறைகள் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விவரம் காணப்படுகிறது. அதுமட்டுமன்றி, சேர் ஒலிவர் குணதிலக வைப் பற்றி ,அவருடன் நடைபெற்ற நேர்காணலின் வடிவத்தில் எழுதப்பட்ட ஒரு நூலும் அது பற்றிய தகவல்களை கொண்டுள்ளது.

சேர் ஜோன் கொத்தலாவல ஒரு பிளேபாய் வகை ஆட்சியாளராக இருந்தார். தனது மதிப்புமிக்க சொத்தின் பெரும் பகுதியை பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கிய ஒரே ஆட்சியாளர்அவராவார்.தனக்குப் பிறகு அடுத்த பிரதமராக சேர் ஜோன் கொத்தலாவலவை நியமிக்க டி.எஸ்.சேனநாயக்க ஏற்பாடுகளை செய்திருந்தால், ஐக்கிய தேசிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி) வரலாறு மிகவும் வித்தியாசமானதாகவிருந்திருக்கும், அவர் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர் என்ற அடிப்படையில் தகுதியுடையவர், அதற்கு வழிவகுக்காமல்அவருக்குப் பின்,அனுபவமற்றவராகவும் அந்த தருணத்தில் அவரது இளமை பருவத்திலும் இருந்த அவரது சொந்த மகன். டட்லி சேனநாயக்கவை நியமிப்பதற்கு வழியமைத்து கொடுக்கப்பட்டிருந்தது.

‘56 புரட்சியின் சூத்திரதாரி என்று கருதக்கூடிய .வண .ஹென்பிடகெதர ஞானசிஹ தேரர் , என்.கே.டயஸ் மற்றும் குணபால மலலசேகர ஆகியோரின் முதலாவது தேர்வு டட்லி சேனநாயக்கவாகும்.பண்டாரநாயக்க அல்ல. அழைப்பை மறுக்காமல் டட்லி ஏற்றிருந்தால் ’56 புரட்சியின் தன்மை என்னவாக இருந்திருக்கும்? அப்படியானால் பண்டாரநாயக்கக்கு என்ன நேர்ந்திருக்கும்?

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (எஸ்.எல்.எஃப்.பி) நிறுவவில்லை. ஆனால் அவரது படுகொலைக்குப் பின்னர், அவரது மனைவி சுதந்திர கட்சியை குடும்பம் சார்ந்த கட்சியாக வளர்த்தார். கண்டி சிங்களவர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்காக அவர் தேர்தல் முறையை மாற்றினார். ஒருவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனநாயகக் கட்சியாக மாறியிருந்தால் இலங்கையின் போக்கு வேறுபட்டிருக்கும், மற்றும். பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கல்வி மற்றும் அனுபவமுள்ள சி.பி .டி சில்வாவுக்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்க முன்வரப்பட்டது.அவரது சாதி காரணமாக ஸ்ரீ.ல.சு.க.வின் தலைமைத்துவத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

1978 அரசியலமைப்பு மாற்றம்

1978 வரை இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்களை திறமையான மற்றும் முதிர்ந்த ஆட்சியாளர்களாக கருத முடியாது என்றாலும், அவர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து பெறப்பட்ட ஜனநாயக அரசியல் கட்டமைப்பை உடைக்க முயற்சிக்கவில்லை. 1972 அரசியலமைப்பால் 1971ஆம் ஆண்டு வரை அனுபவித்த நீதித்துறை ‘மீள் ஆய்வு சக்தியை’ இழந்த போதிலும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பான அம்சங்கள் பாதுகாக்கப்பட்டன.

அரசாங்கத்துடன் எம்.பி.க்கள்,வர்த்தகம் செய்வதற்கான தடை மற்றும் தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் 1977 வரை தொடர்ந்தன. அந்த நேரத்தில்,அரச நிர்வாகத்தில் இரண்டு பெரிய குறைபாடுகள் இருந்தன. ஒன்று, இனம், சாதி மற்றும் மதம் ஆகியவற்றின் பிளவுபடுத்தும் விவகாரங்கள் .மற்றொன்று அரசாங்கத்தின் செலவினங்களில் தாங்க முடியாத சுமையை கொண்ட மானியக் கொள்கையைத் தொடர வேண்டியிருந்தமை .அரிசி மானியத்திற்கான செலவு மட்டுமே கல்விக்கான மொத்த செலவினத்தை விட அதிகமாக இருந்தது.

அரசியலமைப்பின் ஜனநாயகத் தன்மையை முற்றிலுமாக மாற்றுவதற்கும், அரச ஆட்சியை பொதுச் சொத்தை பாரிய அளவில் கொள்ளையடிக்கும் நடவடிக்கையாக மாற்றுவதற்கும் ஒரு அரசியலமைப்பு 1978 இல் இயற்றப்பட்டது. அதனுடன், அதுவரை மூடப்பட்டிருந்த பொருளாதாரம் திறந்தபொருளாதாரமாக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்தது. ஜனநாயகத்தின் மீது சுமத்தப்பட்ட கடுமையான வரையறைகள் இறுதியில் நீடித்த வன்முறை போராட்டங்களால் நாட்டை இடைவிடாத இரத்தக்களரி நிலமாக மாற்றின. பொதுச் சொத்துக்களை பாரிய அளவில் கொள்ளையடிப்பது பல தவறான செயல்களில் மற்றொரு முக்கியமான காரணியாக இருந்தது.ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் அரச ஆட்சியில் அவர் அறிமுகப்படுத்திய கொள்ளையை முன்னோக்கி கொண்டு சென்று, அதில் புதிய அம்சங்களை சேர்த்தனர்.

புரட்சி மற்றும் எதிர் புரட்சி

இந்த ஊழல் முறைமையில் உள்ளார்ந்த இரண்டு குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. ஒன்று, ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு ஆளும் தனது தற்காலிக பாதுகாப்பில் உள்ள பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவது கடுமையான குற்றம் என்பதை வெளிப்படையாக உணரவில்லை. மற்ற அம்சம் என்னவென்றால், இந்த அமைப்பை சாதகமாக பெறுவதைத் தவிர வேறு எந்த தலைவரும் இதுவரை சவால் செய்யவில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு ஜனாதிபதி ஆட்சியின் கீழும், ஜனாதிபதிகளின் ஒப்புதலுடன் பொது சொத்துக்கள் பெரிய அளவில் கொள்ளையடிக்கப்பட்டது.ஆனால் கடந்த 43 ஆண்டுகளில் ஒரு பிரேரணை கூட பாராளுமன்றத்தில் விசாரணைகோரி தாக்கல் செய்யப்படவில்லை.

ஊழல் மற்றும் கொடூரமான அமைப்பை மாற்றியமைப்பதற்கும் , நாடு தோல்வியுற்ற அரசின் நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கும் இலங்கை பெற்ற கடைசி வாய்ப்பாக 2015 இல் அரசாங்கத்தின் மாற்றம் கருதப்படுகிறது. ஆனால் அந்த வாய்ப்பு நேர்மையற்ற மற்றும் வஞ்சகமான முறையில் பயன்படுத்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்லாமல் ,நல்லாட்சி அரசாங்கத்தில் பொறுப்புகளை வகித்த அனைவருமே, இப்போது முழு குற்றச்சாட்டுக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்லாமல், ஜனாதிபதி முறைமையை சட்டத்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவரத் தவறிவிட்டது. நல்லாட்சியும் ,அரச நிர்வாகத்தின் நிரந்தர அம்சமாக மாறியுள்ள ஆளும் கட்சியின் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொது சொத்துக்களை கொள்ளையடிக்கும் வாய்ப்பை பாதுகாத்ததுடன்,அது அவர்களுடைய முக்கியமான அபிலாஷையாகவும் அமைந்தது.

நல்லாட்சி நிர்வாகத்தின் தோல்வியை அதன் குறுகிய மனப்பான்மை,மதவெறி மற்றும் சுயநலம் ஆகியவற்றிற்காக அதன் மீது சுமத்தப்பட்ட வரலாற்றுத் தண்டனையாக காணலாம். இப்போது எங்களுக்கு தலைவர்கள் இல்லை. நாட்டை சீனக் காலனியாக மாற்றுவதன் மூலம் வெற்றிடம் நிரப்பப்பட வாய்ப்புள்ளது.

பினான்சியல் டைம்ஸ்