மட்டு. பொது சுகாதார பரிசோகர்கள் பணிபகிஷ்கரிப்பில்…

352 0

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரையும் பிராந்திய பணிப்பாளர் மற்றும் ஜனாதிபதியையும் தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுத்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று (01) ​தொடக்கம் மறு அறுவித்தல் வரை பணிபஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட பொது சுகாதார சங்கத் தலைவர் சி.சிவகாந்தன் தெரிவித்தார்.

கொரோனா தொற்றை அடுத்து ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள ஒருவரை அவரது வீட்டில் நேற்று முன்தினம் பொது சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தி அந்த வீட்டின் முன்னால் நோட்டீஸ் ஒட்டினர்.

இதனை அடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் பொது சுகாதார உத்தியோகத்தருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி, பிராந்திய சுகாதார பணிப்பாளர், பொது சுகாதார உத்தியோகத்தரையும் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறத்ல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குறித்த நபருக்கு எதிராக பொது சுகாதார உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துள்ளார்.

இருந்த போதும் குறித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொது சுகாதார அதிகாரிகள் தற்போது பல்வேறு கஷ்டங்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இவ்வாறான அச்சுறத்தலால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாக இன்று தொடக்கம் மாவட்டதிலுள்ள அனைத்து பொது சுகாதார உத்தியோகத்தர்களும் மறு அறிவித்தல் வரை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

இதேவேளை பொது சுகாதார உத்தியோகத்தர் சங்கம் இன்றில் இருந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.