பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்ற அமைச்சரவை அனுமதி!

56 0

பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தை கோட்டையில் உள்ள தற்போதைய இடத்திலிருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், 2012ஆம் ஆண்டில் பொலிஸ் தலைமையகத்தை மிரிஹானவுக்கு மாற்றுவதற்கான திட்டம் இருந்தது என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பொலிஸ் தலைமையகம் பெப்பிலியானவுக்கு மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்தார் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானாவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.