கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து!

207 0

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின.