ஈழஎதிலிகளுக்குஉதவிக்கரம் நீட்டிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் திரு செ.செந்தில்குமார்.

246 0

தமிழகத்திலுள்ள தர்மபுரி மாவட்டம் தும்பநல்லியில் முப்பது ஆண்டுகளாக உள்ள ஈழஏதிலிகள் முகாமில் ஏறக்குறைய 450 குடும்பங்களைக் கொண்ட 825பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 70பேர்வரையில் இருக்கின்ற சூழலில், கொறொனா பொதுமுடக்கமானது பெரும் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தோற்றுவித்தது.

வெளியே செல்ல முடியாதவாறு முடக்கப்பட்ட நிலையில் இருந்த மக்களால் ஒரு காணொளியொன்று பகிரப்பட்டிருந்தது. அதனைப் பார்வையிட்ட முனைவர் திரு விஜய் அசோகன் அவர்கள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், மருத்துவருமான திரு செல்வராஜ் செந்தில்குமார் அவர்களின் கவனத்திற்கு இந்தக் காணொளியூடாகக் கொண்டு சென்றதன்வாயிலாகத் தும்பநல்லி ஈழஎதிலிகள் முகாமிலுள்ள மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கிவைத்துள்ளார்.

அவரது இந்த உடன் நடவடிக்கையின் பயனாகத் தமக்கான அடிப்படைத் தேவைகள் கிடைத்துள்ளதை மக்கள் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு தமது நன்றியையும் பாராட்டையும் பகிர்ந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலே உள்ள 9 முகாம்களுட்படத் தமிழகத்திலே மொத்தம் 112ஈழஏதிலிகள் முகாம்களுள்ளமை குறிப்படத்தக்கதாகும்.